Shanmugan Murugavel / 2016 மே 24 , மு.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெர்மனின் உள்ளூர் கால்பந்தாட்டத் தொடரான புண்டலிஸ்காவில் தமது வைரிகளான பொரிஸ்ஸா டொர்ட்டமுண்டிலிருந்து தடுப்பாட்டக்காரரான மற்ஸ் ஹம்மெல்ஸின் ஒப்பந்தத்தை பெயார்ண் மியூனிச் பூர்த்தி செய்துள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் மேற்படி நகர்வானது உறுதிபடுத்தப்பட்டிருந்த நிலையில், 27 வயதான ஜெர்மனி தேசிய கால்பந்தாட்ட அணி வீரரான ஹம்லெஸ்ஸுடன் 5 வருட ஒப்பந்தத்தில் திங்கட்கிழமை (23) கைச்சாத்திட்டுள்ளது.
ஊதியம் தொடர்பில் மௌனமாக இருக்க இரண்டு கழகங்களும் இணங்கியிருந்த நிலையில், பெயார்ண் மியூனிச் 30 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதேவேளை, பெயார்ண் மியூனிச்சின் மத்தியகள வீரரான 23 வயதான மரியோ கோட்ஸே இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலுடன் இணையப் போகின்றார் எனத் தகவல்கள் வெளியாகிய நிலையில், இப்பருவ காலத்தில் பெயாணை விட்டு வெளியேறப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மன்செஸ்டர் சிற்றிக்கு பயிற்சியாளராக செல்லும் தற்போதைய பெயாணின் பயிற்சியாளர் பெப் குவார்டியோலாவை பிரதியீடு செய்யவுள்ள முன்னாள் செல்சி, றியல் மட்ரிட் பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டியை கவரவுள்ளதாக கோட்ஸே தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இப்பருவகாலத்தில் 11 லீக் போட்டிகளையே கோட்ஸே ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
33 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
5 hours ago