Shanmugan Murugavel / 2015 நவம்பர் 16 , மு.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக தனது மெர்சிடஸ் அணியின் சக வீரரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனைத் தோற்கடித்த ஜெர்மனியின் நிக்கோ ரொஸ்பேர்க், பிரேசிலியன் கிரான்ட் பிறிக்ஸை வெற்றி கொண்டார்.
ஹமில்டன், வெற்றி பெறுவதற்காக கடுமையாக முயற்சி செய்த போதும், முதலாவதாக பந்தயத்தை ஆரம்பித்த ரொஸ்பேர்க், முதலாவது வளைவிலேயே முன்னிலை பெற்று, பந்தயம் முழுவதும் அவ்வாறே தொடர்ந்து வெற்றி பெற்றார்.
இந்தப் பந்தயத்தில் மூன்றாமிடத்தை பெராரி அணியின் ஜெர்மனியைச் சேர்ந்த செபஸ்ட்டியான் விட்டலும் நான்காமிடத்தை அதே பெராரி அணியைச் சேர்ந்த பின்லாந்தின் கிமி ராய்க்கோனனும் ஐந்தாம் இடத்தை வில்லியம்ஸ் அணியின் பின்லாந்தைச் சேர்ந்த வல்ட்டேரி போத்தாஸூம் பெற்றனர்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026