2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆண்டின் சிறந்த முகாமையாளராக லெய்செஸ்டரின் முகாமையாளர் றனேரி

Shanmugan Murugavel   / 2016 மே 17 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

லீக் முகாமையாளர் சங்கத்தினால் ஆண்டின் சிறந்த முகாமையாளராக லெய்செஸ்டர் சிற்றி அணியின் முகாமையாளரான கிளாடியோ றனேரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது தவிர, பிறீமியர் லீக் பாராட்டையும் றனேரி பெற்றுள்ளார். மேற்படி பாராட்டைப் பெறும், பிரித்தானியா அல்லது அயர்லாந்தைச் சேராத நாட்டவர்களில் றனேரி இரண்டாமவர் ஆவார். 2002, 2004ஆம் ஆண்டுகளில் மேற்படி பாராட்டை வென்ற ஆர்சனலின் ஆர்சென் வெங்கர், இப்பாராட்டைப் பெற்ற பிரித்தானியா அல்லது அயர்லாந்தைச் சேராத நாட்டவர்களில் முதலாமவர் ஆவார்.    

லெய்செஸ்டர் சிற்றியில் தனது முதலாவது பருவகாலத்திலேயே அவ்வணிக்கு முதலாவது பிரதான பட்டத்தை, 64 வயதான இத்தாலியரான றனேரி வென்று கொடுத்தமையடுத்தே அவருக்கு மேற்படி கௌரவம் கிடைத்துள்ளது.

இதேவேளை, லெய்செஸ்டரின் இந்த பிறீமியர் லீக் பருவகாலத்தில் மூன்று தடவைகள், மாதத்தின் சிறந்த முகாமையாளராக றனேரி தெரிவானதோடு, கடந்த மாதம் தனது தாய்நாட்டில், சிறந்த இத்தாலிய முகாமையாளராகவும் பெயரிடப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .