Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெர்சிடஸ் அணியின் பிரித்தானியாவைச் சேர்ந்த லூயிஸ் ஹமில்ட்டன் தனது மூன்றாவது போர்மியுலா வன் உலக சம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். சேர் ஜக்கி ஸ்டீவர்ட்டுக்கு பின்னர் இச்சாதனையை புரியும் இரண்டாவது பிரித்தானிய சாரதி இவராவார்.
விறுவிறுப்பாக இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க கிராண்ட் பிறிக்ஸில் வெற்றி கொண்டு இந்தவருடத்தில் தனது பத்தாவது வெற்றியைப் பதிவு செய்ததன் மூலமே ஹமில்ட்டன் தனது மூன்றாவது போர்மியுலா வன் உலக சம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளார்.
இந்த ஐக்கிய அமெரிக்க கிராண்ட் பிறிக்ஸில் இரண்டாமிடத்தை மெர்சிடஸ் அணியின் ஜெர்மனியைச் சேர்ந்த நிக்கோ ரோஸ்பேர்க்கும், மூன்றாமிடத்தை பெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனியின் செபஸ்ட்டியன் வெட்டலும் பெற்றனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026