Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 01 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கென்ய தடகளத் தலைவர் இசையா கிப்லகட்டும் வேறு, இரண்டு கென்ய தடகள அதிகாரிகளும் 180 நாட்களுக்கு தொழில்முறையாக தடகள சம்மேளனங்களின் சர்வதேச கூட்டமைப்பின் ஒழுக்கவியல் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
தடகள சம்மேளனங்களின் சர்வதேச கூட்டமைப்பானது கென்யாவில் இடம்பெற்ற ஊக்க மருந்து தடுப்பு நெறிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மீறல்கள் தொடர்பிலும் நைக்கிடமிருந்து பெறப்பட்ட நிதிகள், தவறான திசையில் சென்றதாகக் கூறப்பட்டமை தொடர்பிலும் ஆராய்ந்து வருகிறது.
கிப்லகட்டைத் தவிர, கென்ய தடகள உப தலைவர் டேவிட் ஒகேயோ, முன்னாள் பொருளாளர் ஆகியோரே தொழில்முறையாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்த, இடைநிறுத்தங்கள் உடனடியாகவே ஆரம்பமாகின்றன.
இதேவேளை, 2014-2015 காலப்பகுதியில் கட்டார் தடகள சம்மேளனங்களின் சங்கத்திடமிருந்து, இரண்டு மோட்டார் வாகனங்களை பரிசாக பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் கிப்லகட், தடகள சம்மேளனங்களின் சர்வதேச கூட்டமைப்பால் விசாரிக்கப்படுகின்றார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago