Shanmugan Murugavel / 2016 மே 11 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பெண்கள் அணியின் தலைவியான சர்லோட் எட்வேர்ட்ஸ், தனது இருபதாண்டு விளையாடும் காலத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதில், பத்தாண்டுகள் அணியின் தலைவியாக இருந்துள்ளார்.
வீரர்களிலோ அல்லது வீராங்கனைகளிலோ இங்கிலாந்து அணியை 200க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்கிய முதலாமவராக கடந்த வருடம் மாறியிருந்தார்.
பெண்களின் விளையாட்டு நடைபெறுகின்றது என்றும் வீராங்கனையாகவும் அணித்தலைவியாகவும் தனது பங்களிப்பு தொடர்பில் மிகுந்த பெருமையுடன் தான் விடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
23 டெஸ்ட் போட்டிகளில், 4 சதங்கள், ஒன்பது அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 44.10 என்ற சராசரியில் 1,676 ஓட்டங்களையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், 9 சதங்கள், 46 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 191 38.16 சராசரியில் 5,992 ஓட்டங்களை குவித்ததுடன் 95 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 12 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 32.97 என்ற சராசரியில் 2,605 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago