2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தலையில் பந்து தாக்கிய நடுவர் ஆபத்தின்றித் தப்பினார்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நடுவரான ஜோன் வார்ட், கிரிக்கெட் போட்டியொன்றின் மத்தியஸ்தம் வகித்துக் கொண்டிருந்தபோது தலையில் தாக்கப்பட்டதோடு, அவருக்கு ஆபத்துக்கள் எவையுமின்லை அறிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ரஞ்சி கிண்ணப் போட்டியில், பஞ்சாப் அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமிடையிலான போட்டியிலேயே ஜோன் வார்ட், தலையில் தாக்கப்பட்டார்.
தமிழ்நாடு அணியின் டி.டி. சந்திரசேகர் வீசிய பந்தை பஞ்சாப் அணியின் பிரென்டெர் ஸ்ரான் அடித்தபோதே, நடுவரின் தலையில் பந்து பட்டுள்ளது.

உடனடியாக நிலத்தில் வீழ்ந்த நடுவர், அருகிலிருந்த வைத்தியசாலையொன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு, பின்னர், பிரபல தனியார் வைத்தியசாலையொன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனைகளில், அவருக்கு ஆபத்துகள் எவையுமில்லையெனவும், சில நாட்கள் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .