Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீராங்கனை டேபேந்திரா டோட்டின், தலைச்சுற்று என்ற சந்தேகத்தில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷில், அலன் போர்டர் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், மெல்பேர்ண் ஸ்டார்ஸ் அணிக்கெதிராக பிறிஸ்பேர்ண் ஹீட் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது எல்லையில் வைத்து சக வீராங்கனை லோரா ஹரிஸூடன் தலையில் மோதியுள்ளார்.
தாடை என்பில் பாதிப்பேதும் ஏற்பட்டதா என்று சோதிப்பதற்காக எடுக்கப்பட்ட எக்ஸ் கதிர் பரிசோதனைகள், ஏனைய சோதனைகள் வைத்தியர்களால் ஆய்வுக்குட்படுத்தப்படும் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இணையத்தளத்தில் உள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago