2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கை, பாகிஸ்தான் 2ஆவது ஒ.நா.ச. போட்டி இன்று

Thipaan   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி, ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

பகல் இரவுப் போட்டியாக நடைபெறவுள்ள இப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

3 போட்டிகள் அடங்கிய தொடரின் முதற் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1 இற்கு 0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நாளைய தினம் நடைபெறுவதாகவே இருந்தது.

கொழும்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்தப் போட்டி  ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய தினத்துக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்ல வானிலை நிலவும் என்ற வானிலை அறிக்கை வெளியிடப்படுள்ளது. எனவே, மழையின் குறுக்கீடுகள் இன்றி இந்தப் போட்டி நடைபெறும் என நம்பப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .