2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கை- இங்கிலாந்து 4வது ஒருநாள் சர்வதேச போட்டி

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதனத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி பகல் போட்டியாக நடைபெறவுள்ளது. இங்கிலாந்து அணி 2 இற்கு 1 என்ற ரீதியில் முன்னிலை பெற்று இருப்பதானால் தொடரில் வெற்றி பெற  இலங்கை அணி இன்றைய போட்டியில் வெல்ல வேண்டும் என்பது கட்டாயமாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து அணி மாற்றங்கள் இன்றி கடந்த போட்டியில் விளையாடிய அணியுடன் விளையாடும் என எதிர்பார்க்க முடியும். இலங்கை அணி சார்பாக குஷால் பெரேரா ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் லஹிறு திரிமான்னே மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் வாய்ப்புகளும் உள்ளன. அஷான் பிரியரஞ்சன் அணியை விட்டு நீக்கப்பட வாய்ப்புகள் உள்ள அதேவேளை திசர பெரேரா விளையாடும் வாய்ப்புகளும்  உள்ளன.  

லோர்ட்ஸ் மைதனத்தில் இதுவரை இரு அணிகளும் 5 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இலங்கை அசி 3 வெற்றிகளையும், இங்கிலாந்து அணி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

கடந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை அணி தரப்படுத்தலில் மூன்றாமிடத்தை இழந்துள்ளது. இங்கிலாந்து அணி மூன்றாமிடத்தை கைப்பற்றியுள்ளது. இலங்கை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இழந்த இடத்தைப் பிடிக்க முடியும். ஐந்தாவது போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றால் இரண்டாமிடத்திற்கு முன்னேற முடியும். மாறாக இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தமது மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .