2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இறுதிப் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப்

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது  தெரிவுகாண் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை கிங்ஸ் 11 பஞ்சாப் அணி வெற்றி பெற்று முதற் தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.  இந்தப் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட ஐ.பி.எல் தொடரில் பெறப்பட்ட கூடுதலான ஓட்டங்கள் ஆகும். இதில் விரேந்தர் செவாக் 58 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள் 8 ஆறு ஓட்டங்கள்  அடங்கலாக 122 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். டேவிட் மில்லர் 38 ஓட்டங்களையும், மனன் வொஹ்ரா 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆஷிஸ் நெஹ்ரா 2 விக்கட்களையும், மோஹித் ஷர்மா, அஷ்வின், ஐஸ்வர் பாண்டி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும்  கைப்பற்றினார்.  

பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சுரேஷ் ரெய்னா 25 பந்துகளில் 12 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 87 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். டோனி ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றார். ரவீந்தர் ஜடேஜா 27 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் பிரவிந்தர் அவ்னா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக விரேந்தர் செவாக் தெரிவானார்.  கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிக்கும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்குமிடையிலான இறுதிப் போட்டி நாளை இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .