A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் ரங்கன ஹேரத்தின் அபாரமான பந்துவீச்சின் மூலம் இலங்கை அணி போட்டியில் சமநிலை தன்மையை உருவாக்கியுள்ளது. ரங்கன ஹேரத் 9 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் பலமான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, 332 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. சப்ராஸ் அஹமட் தனது கன்னிச்சத்தத்தைப் பெற்றுக் கொண்டார். 103 ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார். அஹமட் செஷாட் 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். தமது இரண்டாம் இன்னிங்சிற்காக இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் குமார் சங்ககார 58 ஓட்டங்களையும் மஹேல ஜெயவர்தன 49 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர். உப்புல் தரங்க 45 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அப்துர் ரெஹ்மான் 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். 4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago