2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வட்மோருக்கு ICCஇல் பதவி

A.P.Mathan   / 2014 மே 08 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து அண்மையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து பதவியில் இருந்து விலகிய டேவ் வட்மோர், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகளின் மேம்படுத்தலில் ஈடுபடுவார் என சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் அதி உயர் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான குழுவின் முகாமையாளர் உடன் இணைந்து செயற்ப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலககக் கிண்ணத்திற்கு குறிப்பிட்ட நான்கு அணிகளையும் தயார்ப்படுத்தும் நோக்கிலேயே டேவ் வட்மோர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளார்.

14ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் தனது பதியின் ஆரம்பக் கட்டத்தில் டேவ் வட்மோர் களமிறங்கவுள்ளார். இந்த பதவி தனக்கு புதிதாக இருந்தாலும் தான் புளகாங்கித உணர்வுடன் அதை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், இந்த நான்கு அணிகளும் அண்மையில் நல்ல திறமைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில் அவர்களை இலகுவாக மற்ற அணிகளின் தரத்திற்கு கொண்டுவர முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரை மேலும் சுவாரசியம் ஆக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையில் சர்வதேசக் கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது. இலங்கை, பங்களாதேஷ் அணிகளின் வளர்ச்சியில் பெரியளவில் கை கொடுத்தவர் என்பதுடன், 1996ஆம் ஆண்டில் இலங்கை அணி உலகக்கிண்ணம் வெல்ல இவர் முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .