2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தொடரை சமப்படுத்தியது இலங்கை

A.P.Mathan   / 2014 ஜூன் 01 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில், இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதனத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான, இறுக்கமான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

லசித் மாலிங்கவின் சிறப்பான இறுதி ஓவர் இலங்கை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளன. இதன் மூலம் தொடர் சமநிலையில் உள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்ககார 112 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரின் 19ஆவது சதமாகும். திலகரட்ன டில்ஷான் 71 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். சங்ககார, டில்ஷான் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 172 ஓட்டங்களை பெற்றனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஹரி கெர்னி 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோஸ் பட்லர் 121 ஓட்டங்களைப் பெற்றார். ரவி போபரா 51 ஓட்டங்களையும், ஜோ ரூட் 43 ஓட்டங்களையும், கரி பலன்ஸ் 42 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கையின் பந்துவீச்சில் லசித் மாலிங்க 3 விக்கெட்களையும், அஜந்த மென்டிஸ் 2 விக்கெட்களையும்  கைப்பற்றினர். 

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இழந்த மூன்றாமிடத்தை மீண்டும் பெற்றுள்ளது. ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றினால் இரண்டாமிடத்திற்கு முன்னேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .