2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்தியா, இங்கிலாந்து போட்டி சந்தேகம்!

Gavitha   / 2014 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் மழை காரணமாக இன்னமும் ஆரம்பிக்கவில்லை.

இன்று இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி இங்கிலாந்து பிரிஸ்டல் மைதானத்தில் ஆரம்பிக்க இருந்தது. தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வரும் நிலையில் இன்று போட்டி நடைபெறுவது சந்தேகமாகவே உள்ளது. இறுதியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரும் மழையினால் குழப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இதுவரை 87 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் இங்கிலாந்து அணி 35 வெற்றிகளையும், இந்தியா அணி 47 வெற்றிகளையும் பெற்றுள்ளன இரு போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்த்துள்ளன. 3 போட்டிகள் கைவிடப்பட்டன.
 
இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள 34 போட்டிகளில் இங்கிலாந்து அணி 18 வெற்றிகளையும்,  இந்தியா அணி 12 வெற்றிகளையும் பெற்றுள்ளன. ஒரு  போட்டி சமநிலையில் நிறைவடைந்த்து. 3 போட்டிகள் கைவிடப்பட்டன.

டெஸ்ட் போட்டிகளில் மோசமான தொடர் தோல்வியை சந்தித்துள்ள இந்தியா அணி ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளை காட்டி மீள் வருகையை காட்டும் என நம்பப்பட்ட வேளையில் இந்தக் குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியா அணி ஒரு நாள்ப் போட்டிகளில் பலமாக இருப்பதுடன் தரப்படுத்தல்களில் இரண்டாம் இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .