2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

டெஸ்ட் தலைவராக முஸ்பிகீர் தொடர்வதில் சந்தேகம்

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவராக அதன் டெஸ்ட் அணியின் தலைவர் முஸ்பிகீர் ரகீம் தொடர்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

இருப்பினும் இந்திய அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு அவரே அணியின் தலைவராக இருப்பார் என கூறப்படுகின்றது.

விக்கெட் காப்பாளராக செயற்பட்டு துடுப்பாடுவது அவருக்கு சிரமம். அத்துடன் அணித்தலைவராக கடமையாற்றும் போது மேலதிக அழுத்தம் ஏற்படுகிறது.

எனவே, அவர் விக்கெட் காப்பை விட வேண்டும். அல்லது அணித் தலைவர் பொறுப்பை விட்டுக்கொடுக்க வேண்டும்.

பங்களாதேஷ் அணி துடுப்பாட்ட வீரரான அணித் தலைவரையே விரும்புகின்றது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஷ்முள் ஹுசைன் கூறியுள்ளார்.

ரகீமின் தலைமை தொடர்பில் பாகிஸ்தான் தொடர் தோல்வியின் பின்னர் விமரசனங்கள் எழுந்து இருந்தன.

அந்த தொடரின் முதற் போட்டியில் விக்கெட் காப்பின் போது விரலில் காயம் ஏற்ப்பட்டது. அந்த காயம் தொடர் முழுவதையும் பாதித்தது.

எனவே குறித்த விடயம் தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் எனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .