2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பிரதி செய்யப்பட்டதா ஒலிம்பிக் இலட்சினை?

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக், பராஒலிம்பிக் போட்டிகளுக்கான இலட்சினைகள், இன்னோர் இலட்சினையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை, அதன் வடிவமைப்பாளர் மறுத்துள்ளார்.


பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒலிவியர் டேபி என்ற வடிவமைப்பாளர், லியாகே திரையரங்குக்கு தான் வடிவமைத்த இலட்சினையைப் போன்று காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

எனினும், டோக்கியோ ஒலிம்பிக்குக்கான இலட்சினையை வடிவமைத்த கென்ஜிரோ சானோ, இந்த இலட்சினையானது தனது வாழ்வின் மிகச்சிறந்த வடிவமைப்பு எனவும், எந்த இலட்சினையையும் உதாரணமாகக் கொண்டு அதை வடிவமைத்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

“என்னுடைய ஒவ்வொரு வடிவமைப்புடனும் நான் நிறைய நேரத்தைச் செலவிடுகிறேன். அவற்றை சிறுவர்களை வளர்ப்பது போல் வளர்க்கிறேன். ஆகவே, இவ்வாறான வகையிலான கதை வெளிவந்தமை மிகவும் துரதிஷ்டவசமானது என்பதுடன், கவலையானதும் கூட” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வத் தகவலை ஒலிவியர் டேவி, டோக்கியோ 2020 ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, அதைப் பெற்றுக் கொண்டதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்தோடு, அவரது இலட்சினையானது காப்புரிமைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதால், பிரச்சினைகள் எவையும் கிடையாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .