2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தடகள அமைப்பு மீது விமர்சனம்

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊக்க மருந்து விவகாரத்தில் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனத் தெரிவித்து சர்வதேச தடகள சம்மேளனங்களின் சங்கத்தின் மீது, இலண்டன் மரதனின் ஏற்பாட்டாளர்கள், விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.


ஒலிம்பிக் போட்டிகளிலும் உலக சம்பியன்ஷிப் போட்டிகளிலும், மரதன் ஓட்டம், நெடுந்தூர ஓட்டம் போன்ற தாங்குதிறன் வகையிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றோரில், மூன்றிலொரு பங்கினர் ஊக்க மருந்தினைப் பயன்படுத்தியதற்காக அல்லது அது தொடர்பான சந்தேகத்தை வெளிப்படுத்தும் இரத்த மாதிரிகளைக் கொண்டிருந்ததாக, சர்வதேச தடகள சம்மேளனங்களின் சங்கத்தின் தரவுத் தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் செய்தி தெரிவித்திருந்திருந்தன.

இந்நிலையிலேயே, புதிதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிருப்தியடைவதாக, இலண்டன் மரதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அச்சங்கத்தின் இயலாமையையே இது வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கும் இலண்டன் மரதன் ஏற்பாட்டாளர்கள், ஊக்க மருந்து காரணமாக இதுவரை அடையாளங் காணப்பட்டோர்,

இலண்டன் மரதனில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் காரணமாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இலண்டன் மரதனிலும் இவ்வாறு ஊக்க மருந்துப் பாவனையாளர்கள் காணப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்த போதிலும், அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .