2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பிறீமியர் லீக்: ஆர்செனல் தோல்வி

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடருக்கான போட்டிகளில், ஆர்செனல் அணி எதிர்பாராத தோல்வியைக் கண்டுள்ளது. வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணிக்கெதிராகவே இந்தத் தோல்வி கிடைக்கப்பெற்றது.

இப்போட்டியின் முதற்பாதியின் பெரும்பாலான நேரத்தின் போது இரு அணிகளாலும் கோல் பெறப்பட முடியாது போன போதிலும், முதற்பாதி முடிவடைவதற்கு முன்னதாக, போட்டியின் 43ஆவது நிமிடத்தில், முதலாவது கோல் பெறப்பட்டது. வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணியின் செக்கோ குயாட்டே, இந்தக் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

இரண்டாம் பாதி ஆரம்பித்துச் சிறுதி நேரத்தில், போட்டியின் 53ஆவது நிமிடத்தில், வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணியின் மாரோ ஸராட்டே கோலொன்றைப் பெற, அவ்வணி 2-0 என்ற முன்னிலையைப் பெற்றது.

அதன் பின்னர் இரு அணிகளாலும் கோல்கள் பெறப்படாத நிலையில், வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணியின் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

நியூகாசில் யுனைட்டட் அணிக்கும் சௌதம்டன் அணிக்குமிடையிலான போட்டி, 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலயில் முடிவடைந்தது.

ஸ்டோக் சிற்றி அணிக்கும் லிவர்பூல் அணிக்குமிடையிலான போட்டியில், லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக 86ஆவது நிமிடத்தில் பெறப்பட்ட கோலே வெற்றிக் கோலாக அமைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .