Gopikrishna Kanagalingam / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
இதன்படி, நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை குவித்திருந்தது.
துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அதிகபட்சமாக ஜோர்ஜ் வோக்கர் 38 பந்துகளில் 62 ஓட்டங்களையும், மார்ட்டின் கப்டில் 24 பந்துகளில் 33 ஓட்டங்களையும், லுக் ரொங்கி 19 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
இறுதியில் கொலின் முன்றோ 11 பந்துகளில் 23 ஓட்டங்களையும், நேதன் மக்கலம் 7 பந்துகளில் 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட ஷோன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 80 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக கிரெய்க் எர்வின் 42 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக அணிக்கு மீண்டும் திரும்பிய அடம் மிலின் தனது 4 ஓவர்களில் 10 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் நாயகனாக இஷ் சோதி தெரிவானார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago