2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சின்சினாட்டி டென்னிஸ் : ஜோக்கோவிச், மரே, நடால், செரினா வெற்றி

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகளில், முன்னணி வீர, வீராங்கனைகள் வெற்றிபெற்றுள்ளனர்.

முதல்நிலை வீரர் நொவக் ஜோக்கோவிச்சுக்கும் பிரான்ஸின் பெனாய்ட் பெயைருக்குமிடையிலான போட்டியில், 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச் வெற்றிபெற்றார்.

அன்டி மரேக்கும் மார்ட்டி ஃபிஷ்-க்குமிடையிலான போட்டியில், 6-4, 7-6 என்ற செட் கணக்கில் மரே வெற்றிபெற்றார். ஸ்டான் வவ்றிங்காக்கும் பொர்னா சொரிக்குக்குமிடையிலான போட்டியில், 3-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்டான் வவ்றிங்கா வெற்றிபெற்றார்.

அண்மைக்காலமாத் தடுமாறிவரும் ரபேல் நடாலுக்கும் தனசி கொக்கினாகிஸ§க்குமடையிலான போட்டியில், 6-3, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றிபெற்றார்.

பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில், முதல்நிலை வீராங்கனை செரினா வில்லியம்ஸ§க்கும் வெட்டனா பிரொங்கோவுக்குமிடையிலான போட்டியில், 7-5, 6-3 என்ற செட் கணக்கில் செரினா வெற்றிபெற்றார்.

முன்னணி வீராங்கனைகளான விக்டோரியா அஸரெங்கா, சைமோனா ஹாலெப், கரோலின் கார்சியா ஆகியோரும் இதன்போது 2ஆம் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .