Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 21 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முதன்முறையாக நேற்றுப் புதன்கிழமை சத்திரசிகிச்சைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் டாக்டர் மாஹிர், சத்திரசிகிச்சை நிபுணர் ஆர்.டபிள்யூ கமகே, வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதுவரை காலமும் காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .