2021 ஜூன் 16, புதன்கிழமை

சிறுபான்மையினருடன் இணைந்து செயற்பட்டால் சுபீட்சம் ஏற்படும்

Niroshini   / 2016 ஜூலை 25 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

பெரும்பான்மை மக்கள், சிறுபான்மையினரை உரிமையோடு அணைக்கும்போது இந்த நாட்டில் பொருளாதார சுபீட்சம் ஏற்படும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்  கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - உறுகாமம் நீர்ப்பான திட்ட முகாமைத்துவக் குழு ஏற்பாடுசெய்த சிறுபோக அறுவடை விழா, ஞாயிற்றுக்கிழமை(24) சித்தாண்டி - சின்னவெளி - சின்னாளன்வெளி கண்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'நாங்கள் இணைந்த வடகிழக்கில் சமஷ்டி முறையிலான ஆட்சியை கோரி நிற்கின்றோம். அதற்கு ஏற்றவிதத்தில் எல்லோருடைய மனங்களையும் சந்திக்கக்கூடிய விதத்திலே அவர்களுடைய பிரச்சினைகளை அனுகக்கூடிய விதத்தில் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

நாங்கள் இந்த நாட்டின் குழந்தைகள் என்ற எண்ணத்துடன் பெரும்பான்மை மக்கள் எங்களை அனுகவேண்டும். அவர்கள் எங்களை சம உரிமையோடு அணைக்கும் போது இந்த நாட்டில் பொருளாதார சுபீட்சம் எற்படும். ஒரு பகுதி மக்களை ஓரம்கட்டிவிட்டு இந்த நாடு சுபீட்சத்தை நோக்கி செல்லமுடியாது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .