2025 ஜூலை 02, புதன்கிழமை

தாழங்குடா வாகன விபத்தில் ஒருவர் பலி; மூவர் காயம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள தாழங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மாலை 5 மணியளவில் தாழங்குடா வேடர் குடியிருப்பு பிரதான வீதியில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் படுகாயமடைந்த மூவர் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒருவரை  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பியதாக ஆரையம்பதி வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

இவ்விபத்து சம்பவத்தில் உயிரிழந்த மட்டக்களப்பு டச்பார் வீதியில் வசிக்கும் கிளரி பிரதீஸன் (19வயது) என்பவரின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் வேகமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய போது ஒன்றுடன் ஒன்று மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடாத்திவருவதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் நாவற்குடா, மற்றும் தாழங்குடா ஆரையம்பதியை சேர்ந்த இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .