Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2020 மே 11 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் போடப்பட்ட ஊடரங்கு சட்டம்
நீண்ட நாள்களுக்கு பின்னர் தளர்த்தப்பட்ட மையால் மக்கள் அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்படுகின் றன.
அந்தவகையில் கடந்த புதன்கிழமை நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு இன்று திங்கட்கிழமை ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட
நிலையில் கல்குடாப் பிரதேசத்தில் மக்கள் பொருள்களை கொள்வனவு செய்து வருவது குறைவாகவே காண முடிகின்றது.
ஆனால், பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.
பெரும்பாலான வியாபார நிலைய ங்கள் திறக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுவதுடன், வியாபார நிலையங்களில் பொதுமக்கள் பொருள் கொள்வனவு
செய்வதில் ஆர்வம் குறைவாக காணப்படுகின்றது.அத்தோடு முஸ்லிம்களின் புனித நோன்பு பெருநாள் வரவுள்ள நிலையிலும் ஆடை வியாபார நிலையங்களில் மக்கள்
உடைகளை கொள்வனவு செய்து குறைவாகவே உள்ளதுடன், பெரும்பாலான மக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடந்து கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.
வங்கிகளிலும் மக்களின் வருகை குறைவாகவே காணப்படுகின்றது. தற்போது மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தாக்கம் சம்பந்தமான அச்ச நிலைமை
காணப்படுவதுடன், பெரும்பாலும் அன்றாட தொழில் செய்யும் மக்களிடம் பண வசதியின்மை யாலும் மக்களின் வருகை குறைவாக காணப்படு கின்றது.
இதன் காரணமாகவே மக்கள் வியாபார நிலையங்களுக்கு பொருள்கள் கொள்வனவில் ஈடுபடுவது குறைவாக காணப்படுகின்றது.
விற்பனை நிலையங்கள், வங்கிகள் மற்றும் மருந்தகங் களில் பொது மக்கள் சுகாதார பகுதியினரால் விடுக்கப்பட்டுள்ள விதி முறைகளின் படி ஒரு மீற்றர்
இடைவெளி யைப் பின்பற்றி வரிசை கிரமமாக தங்களின் அத்தியா வசிய பொருள்களைக் கொள்வனவு செய்கின்றனர்.
இதன் காரணமாக பொலிஸார் மற்றும் இராணுவத் தினர் மக்களின் நெரிசலினை குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடமைகளில் ஈடுபட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
28 minute ago
39 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
39 minute ago
51 minute ago