Editorial / 2022 ஜூன் 21 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு லாப் சமையல் எரிவாயு இன்று(21) ஒரு மாதத்திற்குப் பின்னர், இன்று (21) கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
ஓட்டமாவடி உட்பட பல இடங்களில் எரிவாயு விநியோகிக்கப்பட்டது. ஆரையம்பதியில் எரிவாயுபெற வந்திருந்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட குழப்பம் காரணமாக விநியோகம் இடை நிறுத்தப்பட்டது.
இந்த லாப் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக நேற்று முன்தினம் (20) மாலை முதல் வரிசைகளில் பொது மக்கள் காத்திருந்தனர்.
ஆரையம்பதியிலுள்ள லாப் சமையல் எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்துக்கு முன்பாக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். எனினும், இன்னொரு பிரதேசத்துக்கான எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதனை அங்கிருந்தவர்கள் தடுத்துநிறுத்தினர்.
இதனால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது. பொலிஸாரும் இராணுவத்தினரும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், லாப் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.




36 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
2 hours ago