Princiya Dixci / 2022 ஜூலை 14 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
ஹம்பாந்தோட்டை ஆழ்கடலில் தத்தளித்த வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என துறைமுக அதிகாரி ஒருவர், இன்று (14) தெரிவித்தார்.
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த 9ஆம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க இயந்திரப் படகில் மூன்று மீனவர்கள் சென்றிருந்தனர்.
இவ்வாறு சென்ற இயந்திரப் படகின் என்ஜின் பழுதடைந்ததால் மூன்று மீனவர்களும் ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் தத்தளித்துள்ளனர்.
இவ்வாறு தத்தளித்த மூன்று மீனவர்களும் கப்பல் ஒன்றின் மீது நேற்று மீட்கப்பட்டு, காலி துறைமுகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மீனவர்கள் சென்ற 34 அடி நீளமான இயந்திரப் படகை கரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago