Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2020 ஜனவரி 05 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், இலத்திரனியல் சுகாதார அட்டை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதன் பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்தார்.
இதன் ஆரம்ப நடவடிக்கையாக, நோயாளர்களது விவரங்கள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்த அட்டை தனிபட்ட சுகாதார இலக்கத்தை உடையதாகக் காணப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் இந்த வைத்தியசாலை முழுமையான கணனி கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு, நோயாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், வைத்தியப் பரிசோதனை அறிக்கைகள் போன்ற சகல விடயங்களும் குறித்த அட்டையில் உள்ளீர்க்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள், தாதியர்கள், வைத்தியசாலை அலுவலர்கள் உட்பட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் சிகிச்சை பெறுவோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago