ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜூலை 11 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூரில், இலவச இருதய சிகிச்சை முகாமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக, நஸீர் ஹாபீஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இந்த இலவச இருதய சிகிச்சை முகாம், ஏறாவூர் அல்முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில்,எதிர்வரும் சனிக்கிழமை (14) காலை 6 மணியிலிருந்து முற்பகல் 11 மணிவரையும் இடம்பெறுவதுடன், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (15) காலை 6 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரையும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சிகிச்சை முகாமில் பங்குபற்றிப் பயனடைய விரும்புவோர், குறைந்தபட்சம் 12 மணித்தியாலம் உணவைத் தவிர்த்துக் கொண்டு வந்து, இருதய சிகிச்சையில் பங்கேற்பது சிறந்தது என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் அறக்கட்டளையான இவ்வறக்கட்டளையின் அனுசரணையில் இடம்பெறும் இந்த முகாமில், இருதய சத்திரசிகிச்சை சிறப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களைப் பரிசோதிக்கவுள்ளனர்.
இந்த இருநாள் இலவச இருதய சிகிச்சை முகாமில் பங்குபற்றி வறிய குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் 20 இருதய நோயாளிகள், கொழும்பு தனியார் வைத்தியசாலையில், இலவச சிகிச்சைக்குத் தகுதிபெறுவர் என்றும், அறக்கட்டளை அறிவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago