ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 கமநல கேந்திர நிலைய விவசாய விரிவாக்கல் பிரிவுகளிலும் இம்முறை 85,665 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக, விவாசாயிகளுக்கான புதிய அரசாங்கத்தின் கீழ், இலவச உர விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், மாவட்டச் செயலாளர் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் இன்று (12) நடைபெற்றது.
இங்கு நெற்செய்கைக்கு மாத்திரமன்றி, ஏனைய உப உணவுப் பயிர்ச் செய்கையாளர்களுக்கும் உரம் விநியோகிக்கப்படவுள்ளமை பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.
மாவட்டக் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் எம்.ஜெகநாதன், விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வி.பேரின்பராசா, தேசிய உர செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம்.சர்ஜூன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago