Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 05 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான்
உடல் வலிக்கு தடவும் தைலத்தை, கவனக்குறைவால் அருந்தி ஒன்றரை வயதுக் குழந்தை பலியாகிய சம்பவம் கிராமமே சோகமயமானது.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை 1 ஆம் திகதி மாலை வேளை பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்க நிலை அடைந்த ஆண் குழந்தை, கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டான்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, கண்டி போதனா வைத்திய சாலையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனிளிக்காமல் வெள்ளிக்கிழமை (03) இரவு உயிரிழந்ததாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹரிகரன் துசேன் எனும் 1 வயதும் 8 மாதமுடைய குழந்தையே மரணமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு, தம்பலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த குழந்தையின் தந்தை பணி நிமிர்த்தம் வளைகுடா நாடுஒன்றில் பணி புரிந்து வருகின்றார் .
குழந்தையின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அன்றைய தினம் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்ப்பத்தில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago