Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
ஊடக அடக்குமுறைக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (05) இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு ஊடகவியலாளர் தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இந்தக் கவயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்கின்றன.
அன்றைய தினம் காந்தி பூங்கா முன்பாக காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் நலன்விரும்பிகள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக ஊடகவியலாளர் தாக்கப்படுவதை கண்டித்தும், அச்சுறுத்தல், விசாரணைகள் இடம்பெறுவதை நிறுத்தக் கோரியும் மற்றும் நாட்டில் நடக்கும் ஊடக அடக்குமுறையைக் கண்டித்தும், இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
48 minute ago
49 minute ago