Editorial / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பழைய இரும்பு கடை முதலாளி ஒரு வரை, செவ்வாய்க்கிழமை (08)அதிகாலை 1.30 மணியளவில் 27 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித்த லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 01.30 மணி அளவில் ஆற்றங்கரை பகுதியில் உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன் போது அங்கு போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடை முதலாளியை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 27 கிராம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் சதாம் உசையின் வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
17 minute ago
27 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
17 minute ago
27 minute ago
49 minute ago