2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் நெடுஞ்சாலை ஓர் அடி உயர்த்தப்பட்டு அபிருத்தி

Suganthini Ratnam   / 2017 மார்ச் 09 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் நகரத்தை ஊடறுக்கும் மட்டக்களப்பு -கொழும்பு நெடுஞ்சாலை ஓர் அடி உயர்த்தப்பட்டு, அபிவிருத்தி செய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைப் பொறியியலாளர் ரீ.பத்மராஜா, புதன்கிழமை (9) தெரிவித்தார்.

எனவே, இதைக்; கவனத்திற்கொண்டு கடைகளையும் வீடுகளையும் நிர்மாணிக்குமாறு உரிமையாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கென நகர அபிவிருத்தி நீர் விநியோக அமைச்சு 1000 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நெடுஞ்சாலையின் அபிவிருத்திப் பணி எதிர்வரும் ஜுன் மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X