2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர்ப்பற்றில் அரசாங்கக் காணிகளை அளக்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 09 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் கடற்கரையோரத்தை அண்டியுள்ள அரசாங்கக் காணிகளை அளவிடும் வேலை புதன்கிழமை (8) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புன்னைக்குடா, தளவாய், சவுக்கடி, சின்னச் சவுக்கடி ஆகிய கிராமங்களில் கடற்கரையோரங்களை அண்டியுள்ள காணிகளே அளவிடப்படுகின்றன.

14 நாட்களுக்கு காணிகளை அளவிடும் வேலை இடம்பெறும் எனத் தெரிவித்த அதிகாரிகள், அரசாங்கக் காணிகளை அடையாளம் காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரையோரப் பகுதிகள் தற்போது உல்லாசப் பயணத் துறைக்குப் பொருத்தமாக அபிவிருத்தி செய்யப்படுவதால், கவனிப்பாரற்றுக் கிடக்கும் இக்காணிகளுக்கும்  மவுசு ஏற்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X