Suganthini Ratnam / 2016 ஜூலை 05 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் போக்கர் வீதியை அண்டி அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தங்கநகைகளும் பணமும் திருட்டுப் போனமை தொடர்பில் பொலிஸில் அவ்வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகைகளும் ஆயிரம் ரூபாய் பணமும் திருட்டுப் போயுள்ளதாக முறைப்பாட்டில் அவ்வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
புனித றமழான் நோன்புத் தொழுகையை திங்கட்கிழமை (04) நள்ளிரவு முடித்துவிட்டு, வீட்டில் உள்ள அனைவரும் உறங்கச் சென்றுவிட்டனர். வழமை போன்று நோன்பு அனுஷ்டிப்பதற்காக இன்றையதினம் அதிகாலை 04 மணிக்கு எழுந்;தபோது, வீட்டில் இருந்த 02 அலுமாரிகள் திறந்து காணப்பட்டதுடன், அவற்றில் வைக்கப்பட்டிருந்த புடைவைகள் உள்ளிட்ட பொருட்கள் வெளியில் சிதறிக் கிடந்தன. அத்துடன், அலுமாரிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கநகைகளும் பணமும் திருட்டுப்போயிருந்தன எனவும் முறைப்பாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருடர்கள் மதிலால் பாய்ந்துவந்து வீட்டுக் கதவுளைத் திறந்துகொண்டு சென்று திருடியுள்ளதுடன், அலவாங்கு கொண்டுவந்து வீட்டுக் கதவுகளைத் திறக்க திருடர்கள் பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago