Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 09 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன், வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
சுகாதாரத் திணைகள உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 05 ஆசனங்களுக்காக, கட்சிகளையும் சுயேற்சைக் குழுக்களையும் சேர்ந்த 304 பேர் போட்டியிடுகின்றனர்.
2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகளுக்கமைய நடைபெறவுள்ள இத்தேர்தலில், 4 இலட்சத்து 9 ஆயிரத்து 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனரென, மாவட்ட தேர்தல்கள் அலுவலக அறிக்கை தெரிவிக்கின்றது.
இதன்படி, மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 809 வாக்காளர்களும், கல்குடாத் தொகுதியில் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 928 வாக்காளர்களும், பட்டிருப்புத் தொகுதியில் 97 ஆயிரத்து 71 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இறுதியாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஞானமுத்து சிறினேசன், எஸ்.வியாழேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரனுமாக மூவரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலிஸாஹிர் மௌலானாவும் தெரிவாகியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago