Princiya Dixci / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை ரயில் நிலைய பிரதேசத்தில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் 67 வயதுடைய நபர், இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து சுமார் 37.6 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய, கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
6 hours ago