2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

வா.கிருஸ்ணா   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலபோட்டமடு ஆற்றுப்பகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமென்று, இன்று (03) நண்பகல் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, கசிப்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் 20,250 மில்லி லீற்றர்  கோடா, 4,125 மில்லி லீற்றர் கசிப்பு என்பனவற்றையும் கசிப்புக் காய்ச்சுவதற்கான உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற வவுணதீவு பொலிஸார், காலபோட்டமடு பகுதியில் உள்ள ஆற்றங்கரையினையண்டிய காட்டுப்பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீரின் ஆலோசனையின் கீழ், வவுணதீவு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் விஜயந்த தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர், இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பியோடியுள்ளனரெனவும் அவர்களைக் கைதுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X