Freelancer / 2023 செப்டெம்பர் 24 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடி கடற் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பை தடுப்பதற்காக நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் கரையோர பாதுகாப்பு தா நிலங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சு துரித நடவடிக்கைகளைஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள பிராந்திய பொறியியலாளர் முருகேசன் துளசிதாசன் தெரிவித்தார்.
குறித்த கடலரிப்பு பிரதேசத்தில் சுமார் 80 மீட்டர் நீளத்திலும் மூன்று மீட்டர் ஆழத்திலும் பாரிய கற்பாறைகளை கொண்டு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு வருவதாகவும் இதற்கென கரையோர பாதுகாப்பு தாழ்நிலங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சு முதற்கட்டமாக 15 லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .