பேரின்பராஜா சபேஷ் / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கொக்குக்குஞ்சிமடு பிரதேசத்தில், இரண்டு கட்டுத்துப்பாக்கிகளுடன் இருவர், நேற்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளனரென, கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ. சமரகோன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது மேற்படி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி ஜயசேனவின் அறிவுறுத்தலுக்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டப் போதையொழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிஜி. ஜயலத் தலைமையில், இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இந்தத் துப்பாக்கிகள், காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென, சந்தேகிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்றையதினமே ஆஜர்செய்யப்பட்டதையடுத்து, இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக, கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago