Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
கதிர்காம பாதயாத்திரிகளான இந்து மக்கள் தமது நேர்த்தக் கடன்களை நிறைவேற்றிவிட்டு, உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்க ஜனாதிபதி, பாதுகாப்புத் துறையினர் கவனமெனடுக்க வேண்டுமென, மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களராம விகாரையில், இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, அவர் மேற்படிக் கோரிக்கையை முன்வைத்தார்.
கதிர்காம உற்சவம் தற்போது ஆரம்பமாகிய நிலையில், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிழக்கு மாகாணத்தின் சகல பிரதேசங்களிலிருந்து இந்து மக்கள் கதிர்காமத்துக்கு நடந்து செல்கின்றார்கள் என, அவர் தெரிவித்தார்.
இம்மக்கள், நேத்திக்கடன்களை வைத்து, அவற்றை நிறைவேற்றுதற்காக செல்கின்றார்கள் என்றும் கொரோனா நிலையின் காரணமாக இப்புனித பாதயாத்திரையை மேற்கொண்ட இந்து மக்கள், கதிர்காமம் செல்லமுடியாது, இடைநடுவில் நிற்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, ஜனாதிபதியும் பாதுகாப்புத் துறையினரும் இது தொடர்பாக மேலான கவனத்தைச் செலுத்தி, இந்து பக்தர்கள் நடந்து சென்று, கதிர்காமத்தில் தரித்திருக்காமல், தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிட்டு, உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்குமாறு, அம்பிட்டிய தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago