Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரனையுடன் தொழிற்படும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பெண்கள் வலுவூட்டல் செயத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்ட நிகழ்வு மட்டக்களப்பு ப.நோ.ச.கட்டட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை பகல் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வெல்லாவெளி, பட்டிப்பளை, கிரான், வவுணதீவூ, வாழைச்சேனை ஆகிய ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் நலிவுற்ற குடும்பங்களில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவான மிகவும் பொருளாதாரத்தில் கஸ்ர நிலையில் வாழும் மாணவர்களை கிராமமட்ட பெண்கள் குழுக்களின் அனுசரனையுடன் இவ் ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் ஐP. தர்சினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 61 கஸ்ரமான நிலையில் வாழும் குடும்பங்களில் உள்ள பல்கலைக்கழகம் கற்கும் மாணவர்களுக்கு தலா 5000 ரூபா படி 59 மாணவர்களுக்கு காசோலையாக இவ் உதவிகள்வழங்கப்பட்டன.
நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாகவும் மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகத்தின் மாவட்ட இணைப்பாளர் த.திலீப்குமார், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் பல்கலைகழக மாணவர்கள் பங்கு கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .