Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தானர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,
நீர்கொழும்பிலிருந்து பாண்டிருப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த காரொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கார், நீதிமன்றத்துக்கு முன்னால் நின்ற மரத்தில் மோதி பின்னர் மின்கம்பம் ஒன்றின் மீது விழுந்துள்ளது. இதனால் மரம் இரண்டாகப் பிளந்ததுடன், மின்கம்பமும் உடைந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தின் போது ஏற்பட்ட பாரிய சத்தத்தைக் கேட்ட அருகிலிருந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும், காரில் இருந்த பெண் ஒருவர் உட்பட்ட 6 பேரையும் பலத்த காயங்களுடன் மீட்டு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர், இதில் பாதிப்புற்ற 6 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனரென, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்விபத்துச் சம்பவத்தில் கார் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
14 minute ago
31 minute ago