Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்துக்குச் சொந்தமான குடும்பிமலை ஒதுக்குக்காடு மற்றும் கதிரவெளி காட்டு பகுதிகளில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர், நேற்று (18) மாலை கைதுசெய்யப்பட்டனர் என, வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.
குடும்பிமலை ஒதுக்குக்காடு பகுதியில், வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, வன திணைக்களத்துக்குரிய எல்லைக் கல்லை அகற்றி, காடழிப்பில் ஈடுபட்ட நிலையிலேயே, சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வாகனங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும் சுங்கான்கேணி மற்றும் சித்தாண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என வன உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
27 minute ago
43 minute ago