Editorial / 2017 நவம்பர் 26 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் கிராமத்தில் மேசன் தொழிலாளி ஒருவரின் சடலத்தைத் தாம் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், புன்னைக்குடா வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் அஹமதுலெப்பை (வயது 67) என்பவரின் சடலமே, காட்டுக்குள் இருந்து சனிக்கிழமை (25) இரவு 10 மணியளவில் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மேசன் தொழிலாளியான இவர், தனது தொழில் நேரம் போக ஏனைய வேளைகளில் புன்னைக்குடா வீதி மஜீத் மாவத்தையில் அவருக்கு உரித்தான ஒரு துண்டுக் காணிப் பராமரிப்பில் ஈடுபடுவதுண்டு என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு வழமைபோன்று, காணியைப் பராமரிப்பதற்காகச் சென்றவரே அருகிலுள்ள தளவாய் கிராம காட்டுக்குள் இறந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் பொலிஸார் பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில் ஸ்தலத்துக்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸார், சடலத்தை உடற் கூறு பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

33 minute ago
45 minute ago
55 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
55 minute ago
5 hours ago