Freelancer / 2022 ஒக்டோபர் 05 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (04) உத்தரவிட்டார்.
காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக தெரிவித்து சம்பவ தினமான 2ஆம் திகதி அப்பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த இளைஞனை கைது செய்து செவ்வாய்க் கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். (R)
54 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
6 hours ago