Princiya Dixci / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி கடற்கரையில் கடலரிப்புக் காரணமாக அப்பகுதி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக இங்கு பாரிய கடலரிப்பு ஏற்பட்டு வருவதுடன், காத்தான்குடி கடற்கரையின் ஏத்துக்கால் பகுதியிலேயே கடலரிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியிலுள்ள மீன்பிடி படகுககள் கரையை அன்மித்த வீதியின் ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியிலுள்ள சிற்றுண்டிச் சாலைகள், கட்டடங்கள், மரங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
இந்தக் கலரிப்புக் காரணமாக மீன்பிடி படகுகளை கடலுக்கு கொண்டு செல்வதிலும் மீனவர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
எனவே, காத்தான்குடி கடற்கரையில் ஏற்படும் கடலரிப்பை தடுக்க கடற்றொழில் திணைக்களம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளிடம் மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
16 minute ago
23 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
34 minute ago
1 hours ago