Janu / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலநிலை மாற்றங்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்படும் கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமங்களை சைல்ட் ஃபண்ட் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மேம்படுத்த புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இப்புதிய திட்டம் ஆரம்பிக்கப்படுவது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கும் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது காலநிலை மாற்றத்திற்கேற்ப மழை வெள்ளத்தினாலும், வரட்சியினாலும் பெரிதும் பாதிக்கப்படும் கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குடும்பிமலை, கோராவெளி, முறுத்தானை, பேரில்லாவெளி, ஊத்துச்சேனை ஆகிய ஐந்து கிராமங்கள் இத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டு நடைமுறைப்டபடுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் சைல்ட் பண்ட்- நியுசிலாந் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம். பௌலர், அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே. கஜேந்திரன்,திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர் யூ.எஸ்.எம். றிஸ்வி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்




51 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago