Freelancer / 2023 நவம்பர் 03 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு வாவியின் ஊடாக எழுவாங்கரைப் பகுதிக்கு இரண்டு காட்டு இன்று (03) அதிகாலை உட்புகுந்துள்ளதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதிகாலை சுமார் 3 மணியளவில் இக்காட்டு யானைகள் மட்டக்களப்பு வாவியை கடந்து களுதாவளைக் கிராமத்திற்குள் உட்புகுந்தள்ளன.
இவ்வாறு கிராமத்திற்குள் உட்புகுந்த இரு காட்டு யானைகள், தோட்டங்களையும் வீட்டு வேலிகளையும், துவம்சம் செய்துவிட்டு மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள தோட்டங்களுக்குள் உட்புந்துள்ளன.
தற்போது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணக்கள யானைகளை விரட்டியுள்ளனர்.
மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. M


15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago